முகவுரை
இது என் முதல் தமிழ் மொழி பிலாக். நான் ஐம்பதாண்டுகளாக வெளிநாட்டில் இருப்பதாலும் உயர்நிலைப்பள்ளியளவே (1954) தமிழ் பயின்றதாலும் இந்த பிலாகில் இலக்கணத் தவறுகள் பல இருக்கலாம். இதைப்படிப்பவர்களை நான் மன்னிக்க வேண்டுகிறேன்.
முன்னுரை
நாராயணீயம் என்ற வடமொழிக்கவிதை இயற்றிய நாராயணீய பட்டத்திரிகள் நம் மறைகள், இதிகாஸங்கள், 18 புராணங்கள், கபிலமுனி ஸாங்க்கிய, பதஞ்ஜலமுனி யோக, வேதாந்த சாத்திரங்களில் வித்தகர். அவர் நூராயியம் கவிதைகள் உள்ள பாகவதபுராணத்தை ஓராயிரக்கவிதையிலில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்தார்.
இக்கவிதையை நான் காணவைத்தது எனது தங்கை திருமதி சியாமளா. அவர் இருபதாண்டுகளாக இக்கவிதையை தினம் பாராயணம் செய்யும் பக்தை. படித்தல், சிந்தித்தல், பலருக்கு சொல்லித்தருதல், மற்றோருடன் அளவாடுதல் என்ற வடமொழி முதுமொழிப்படி என்னுடனும் பேசினார். பல்லாண்டுகளாக வேதாந்தம் கற்றதாலும் வடமொழி நன்கு அறிந்ததாலும், கபிலமுனி, பதஞ்ஜலி சாத்திரங்கள் படித்தாலும் என்மனம் நாராயணீயத்தில் உடன் ஈடுபட்டது. இது பக்தி முதலான கவிதையாயினும் அவரது பல சிந்தாந்த வன்மை நங்கு பிரகாசிக்கிறது் பற்பல இடங்களில். இந்த பக்திரஸ அமுதைப் பல்லாயிரவர்கள் பருகினும் இப்பாடல்கள் எனக்கு அறுசுவை உணவுபோல் உள்ளது. அதன் பலன், நான் கண்ட நாயணீயக்கடலை என் எழுத்தெனும் குறுணியால் அளக்கிறேன். இதற்கும் காரணம் என் தங்கைதான். பெரியோர்கள் இதிலுள்ள குறைகளை மன்னிக்க வேண்டுகிறேன்.
வியாசரும் நாராயண பட்டத்திரியும்
வியாசரின் துயரம்
வியாசர் வேதங்களை நான்காகப் பகுத்தியவர், வேதாந்த சூத்திரங்களை எழுதியவர், மகாபாரதமெனும் இதிகாசமும் இயற்றினர் என்பது நம் மரபு. அப்படியிருப்பினும் அவருக்கு மன அமைதி இல்லை. மனத்துயர் நீங்க ஸ்ரீமத் பாகவத புராணத்தை இயற்றினார், நாரதமுனியின் சொற்படி. அந்த 100,000 கவிதைகளைப்புனைந்து மனத்துயர் நீக்கினார் என்பதும் மரபு.
நாராயணபட்டத்திரியின் துயரம்
நாராயண பட்டத்திரி என்பவர் பட்டத்திரி குடும்பத்தில் நாராயணன் என்னும் பெயர் கொண்டவர். வியாசர் காலத்திற்குப்பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர். மிகச் சிறந்த புத்திமான், பல சாத்திரங்கள் கற்றவர். அவர் உடல் நோயால் மிகத் துன்பமும் அதனால் மனத்துயரும் அடைந்தார். அவர் நோய்தீர குருவாயூரப்பனைத் தொழவேண்டுமென்று சான்றோர் ஒருவர் கூறினார். நாராயணனின் பத்து அவதாரங்களை கவிதையாகப் புனைந்து அக்கோயிலில் சென்று சொல்லவுமென்றார். வியாசரின் 100,000 கொண்ட ஸ்ரீமத் பாகவத புராணத்தை ஒட்டி 1,034 பாடல்களை 100 தசகம் என்ற பெயரில் நாராயண அவதாரங்களை விவரித்தார். அந்தக் கவிதையின் பெயர் நாராயணீயம். நூறாவது நாளில் பாடல்களை முடித்ததன்று நோயும் மனத்ததுயரும் அவரை விட்டதென்று அவர் சரிதம் கூருகிறது.
இன்றும் பல்லாயிர ஆத்திரிகள் தங்கள், அல்லது சுற்றார்கள், நண்பர்கள் உடல், மன நிலை துயரம் துடைக்க அக்காவியத்தை படிக்கின்றனர். அதன் பலனைக் கண்கூடாகப் பார்க்கின்றனர். இந்த நாராயணீய தசகதங்கள்ளில் கடைசிப் பாடல்களில் எந்நோய் தீர்த்தருள் வாயூரப்பனே என்று உள்ளது. அவர் ஏன் குருவாயூரப்பனே என்றோ குரு அப்பனே அல்லது நாராயணே என்றோ பதிகங்களில் இயற்றவில்லை என்பதில் ஒரு உட்கருத்து உள்ளது. இப்படிப்பட்ட ஆழ்ந்த உட்பொருள் பல உள்ள மேலான கவிதை ரசத்தைப் பருகும் நானியன்ற அளவு அக்காவிய உட்பொருளை எழுத விரும்புகிறேன், அந்த குருவாயூரப்பன் நாராயணனருளால்.
நாராயணன் எனும் பெயரின் பொருள் — நாரனென்றதக்கு மனிதனென்று தமிழ்ப்பொருள். அயனமென்பது அடைக்கலம், இதன்படி நாராயணண் என்ற சொல்லின் பொருள் “மக்களின் அடைகலம்”. இது திருமாலின் மறு பெயர். நாராயணீயம் என்ற வடமொழிச் சொல்லின் பொருள் “(மக்களின் அடைகலமெனும்) நாராயணனைப்பற்றிய (கவிதை)”.
இறைவணக்கம்
எக்காரியம் தொடங்கமுன் இறைவணக்கம் செய்வது நம் மரபு. வியாஸமுனி ஶ்ரீமத் பாகவதம் புனைந்தபோதும் இம்மரபைக் கடைப்பிடித்தார். “ஜன்மாத்யஸ்ய” என்ற முதல் பாடலில் இறைவணக்கம் செய்தார். இக்கால வழக்கம் போல் கடவுளின் உருவத்தையோ, இறைவனை எண்ணும் மந்திரங்களையோ அப்பாசுரத்தில் உரைக்கமல் இறைவனின் உண்மையை மட்டுமே உரைத்தார். அந்த பாசுரம்:
ஐன்மாத்யஸ்யஐகதஸ்ஸ்வார்த்தேஷ்வபிஞஸ்ஸவராட்
தெனே ப்ரஹ்மஹ்ரிதாயஆதிகவயேமுஹ்யன்தியத்ஸூரய:
தேஜோவாரிம்ருதாம் யதாவினிமயோ யத்ர த்ரிஸர்கோ ம்ருஷா
தாம்னா ஸ்வேன ஸதாநிரஸ்த குஹகம்ந நித்யம் பரம் தீமஹி.
இதன் பொழிப்புரை:
எதனிடமிருந்து அனைத்துலகமும் தொடங்கி, நின்று, அடங்கியதோ
எதனுண்மை யாதுமறிந்த ஜோதி உருவோ
எது இவ்வுலகி்ன் உள்ளும் வெளியுமாக உள்ளதோ
எது வேதங்களை பிரம்மாவுக்கு தெரிவிற்றதோ
எதன் உணமை பற்றி முனிகள் குழப்பமடைகின்றரோ
கானல் நீர் போல் இந்த உலகும் (அதன் மாயையால்) உண்மை போல் உள்ளதோ
எது இந்த மாயைக்கு என்றும் உட்படாத்தோ
அந்தப் பேருண்மையை நாம் தியானம் செய்வோம்.
அந்த பாகவத்த்தின் சாரமான நாராயணீயத்தில் பட்டத்திரியும் வியாசரின் பாகவத முதற் பாடலை ஒட்டியே தம் முதற்பாடல் புனைந்தார். அப்பாடல்:
ஸாந்த்ரானந்தாவபோதாத்மகம் அனுபமிதம் காலதேசாவதிப்யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிகமஶதசகஸ்ரைர் நிர்பாஸ்யமானம்
அஸ்பஷ்டம் த்ருஷ்டமாத்ரே புனருரு புருஷார்த்தாத்மகம் ப்ரஹ்மதத்வம்
தத் தாவத்பாதி குருபவனபுரபதே ஹன்த பாக்யம் ஜனானாம்.
இதன் பொழிப்புரை:
அளவற்ற இன்ப உணர்வை அளிப்பது, உவமை அற்றது
காலம், தேசம் என்ற எல்லைகளுக்குப் பார்பட்டது
என்றும் எதனாலும் கட்டுப்படாத விடுதலையாக உள்ளது
பல நூராயிர மறைகளால் நன்கு தெரிவிக்கப் பட்டது
(அப்படி இருப்பினும்) தெளிவாகப் புரியாதது
அப்பிரம்மனின் உண்மையை உணர்ந்த உடன்
மனிதன் (வாழ்ககையில்) மிக நாடுவதை (அடைகிறான்)
(அந்த பிரம்மனின்) உருவாக விளங்கும் குருவாயூரப்பனே!
(இது) மக்களின் பெரிம் பேறுதான்.
வியாசமுனி, நாராயண பட்டத்திரிகளின் முதற்பாடல்களின் பொழிப்புரைகள் தமிழில் இருப்பினும் விரிவுரை இன்றி நம்மால் நன்கு அறிய முடியவில்லை. தெளிவாகத்தெரிவது ஒன்றுதான் பட்டத்திரி குருயாயூரப்பன் சிலையில் அந்த உருவமற்ற இறைவனது உண்மையை உருவகப் படுத்தி இது மக்கனின் பெரும் பேறு’ என்றார். ஆனால் வியாசரோ ‘அந்த பேருண்மையை தியானிப்போம்’ என்றார். வியாசரின் மதற்பாசுரத்தை ஒற்றி இப்பாடலை இயற்றியவர் ஏன் கடவுளை உருவகப்படுத்தினர்?
ஏனெனில், இருவரின் காலம் பல்லாயிர ஆண்டுகள் இடைப்பட்டது. இவ்விடைக்காலத்தில் இறைவனை எல்லோரும் துதிக்க சுலமான வழி ‘நட்ட கல்லை தெய்வமென்று’ சொல்லி, அத்தெய்வத்தைத் தொழுவதுதான். அந்த சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த பட்டத்திரி, வேதாந்த வித்தகர், வேதாந்த தத்துவத்தை கவிதையாகப் புனைந்து முதற் பாடலின் கடைசி அடியில் அந்த அருவான தத்துவத்தின் உருவாகக்கொண்ட குருவாயூரப்பன் மக்களின் பெரும்பேறு என்கிறார்.
பட்டத்திரியின்முதற்பாடலின்பதஉரை
இப்பத உரை ஶ்ரீ அனந்தராம தீக்ஷதரின் பதவுரையை அடிப்படையாகக்கொண்டது.
ஸாந்த்ரானந்த-அவபோதாத்மகம்= பூர்ணமான ஆனந்த, ஞானத்தின் ஸ்வரூபமாக உடையதும்
அனுபமிதம் = உவமையற்றதும்
காலதேசவதிப்யாம்நிர்முக்தம் = காலதேசங்களால் கட்டுப்படாததும்
நித்யமுக்தம் = (அதனால்) என்றும் முக்தியானதும்
நிகமஶதசகஸ்ரைர்நிர்பாஸ்யமானம் = நூராயிர வேதங்களல் காட்டப்பட்டதும்
அஸ்பஷ்டம் = (அப்படி இருப்பினும்) தெளிவாகத் தெரியாத்தும்
புன: = (ஆனால்) மேலும்
த்ருஷ்டமாத்ரே = (வேதங்களால் குறிப்பாகக் கூறிய இவ்வுண்மையை) உணர்ந்த உடன்
உருபுருஷார்த்தகம்= மிகச்சிறந்த வீடு அல்லது மோக்ஷம் அளிக்கும்
ப்ரஹ்மதத்வம் = பிரம்மன்
தத்தாவத்பாதி = (உள்ள) அந்த பிரம்மனே (சிலை உருவாக) விளங்கும்
குருபவனபுரபதே = வாயூரப்பனே
ஹந்தபாக்யம் ஜனானாம் = (இது) என்ன மக்களின் பெரும்பேறு!
விளக்கஉரையின்முன்னுரை
நாராயண பட்டத்திரி ஆழ்ந்த வேதாந்த பண்டிதர் என்பது இந்த முதல் பாடலிலேயே தெரிகிறது. ஆனால் பத உரையில் பவனபுரபதேஹந்தபாக்யம் ஜனானாம் என்ற சொற்களைத் தவிற மற்ற வார்த்தைகளை மொழிபெயர்த்தாலும் பொருள் மனதில் பதியவில்லை, பற்பல சந்தேகங்கள் தோன்றுகின்றன! ஏனென்றால் இந்த பெரும்பான்மையான சொற்கள் — ஸாந்த்ரானந்த-அவபோதாத்மகம், நித்யமுக்தம், உருபுருஷார்த்தகம், மற்றும் பல — வேதாந்தநுட்பமானவைகள், சுலபமாக எந்த மொழியிலும் மொழிபெயக்க முடியாது. ஆகையால் இப்பாடலின் ஆழத்தையுணற விளக்க உரை வேண்டும். வேதாந்த சொற்களை விளங்க வைக்க முயல்கிறேன். முதற்கண் வேதாந்தத்தின் முக்கியக் குறிக்ககோளை சற்று விவரிக்க வேண்டும்.
ஆத்திகர்கள், நாத்திகர்கள், இவ்விருவருக்கும் இறைவனைப் பற்றி தீர்மானமான நம்பிக்கை உண்டு. ஆத்திகர்கள் இறைவன் உண்டென்று நம்புபவர்கள். நாத்திகர்கள் இறைவன் இல்லை என்று நம்புகின்றனர். நம்பிக்கைக்கும் அறிவுக்கும் வேறுபாடு உண்டே. இறைவனின் உண்மை / இன்மையைத் தெரிவிக்க விஞ்ஞான ஆராய்ச்சி உதவாது. ஏனெனில் நாத்திகர் ஆத்திகர் இருவரும் இறைவன் நமக்கு வெளியில், சுவர்கத்திலோ, கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ, உள்ளவன் என்ற பற்பல மத அடிப்படையில் உள்ளவர்களே.
இங்கு என் நண்பர் ஒருவர் விஞ்ஞான ஆராய்ச்சியில் மட்டும் நம்புபவர். ஆனால் சிந்தித்தால் எந்த வித ஆராய்ச்சியாலும் இறைவனை நிரூபிக்க இயலாது என்பது திண்ணம். ஏனெனில் படைத்தவனை படைக்கப்பட்ட ஒருவனால் நிரூபிக்க இயலுமா? நிரூபிப்பான் என்பது பகுத்தறிவிற்குப் பார்பட்டதே. ஆகையால் ஆத்திகர்கள், நாத்திகர்கள் இருவரும் கடவுளைப்பற்றி தீவிர, அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவரே! மேலும் விஞ்ஞான ஆராய்ச்சி செய்பவன் உள்ளத்திலும் உள்ளவன் என்பது நம்மதத்தில் இருப்பினும் இக்காலக் கோயில்களின் கூடும் பல்லாயிர மக்கள் இறைவனை தங்களுக்கு வேறானவன் என்றே நம்புகின்றனர்.
எல்லா மதங்களிலும் இறைவன் வேறு, இவ்வுலகம் வேறு, அவனை வேண்டின் நம் இடர்கள் நீங்கும், தர்மவழி கடைப்பிடிடைத்த பலம் சுவர்கமும், இன்மையேல் நரகமும் என்றும், இறைவனின் உறைவிடம் சுவர்கமெனும் நம்பிக்கைகள் உள. மேலும், அவன் எங்கும் உள்ளவன், எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன் என்று மறைகள் ஓதினும் பொதுவாக மக்கள் இதை உணர்வதில்லை. அம்மறைகளை அறிந்தவரும் இந்த உண்மையை உணரமுடியவில்லை! ஏனெனில் ஒரு சிலையிலோ, வேறு உருவத்திலோ, மந்திரத்திலோ மனதை செலுத்துவது சுலபமானது.
அத்வைத வேதாந்த (உபனிட) தத்துவம்
நான் வேறு, உலகம் வேறு, கடவுள் வேறு என்ற அடிப்படைக் கொள்கைகளுக்குக் காரணமாகிய பகுத்தறிவு இதுதான் — உலகில் பொருள்கள் (inanimate things) உயிர்கள் (living beings), என்ற இருவித இனங்கள் உள. எறும்பு முதல் மனிதன் வரை பொருள்களைப் பயன்படுத்தியே வாழ்கின்றனர். இறைவனை ஒரு பொருளாகக் கருத இயலாது, ஏனெனில் எப்பொருளும் உயிரைப்படைப்பதில்லை. அக்கடவுளை உயிரென்றே எண்ணவேண்டும். உயிரெனின் அனின் உறைவிடம் இவ்வுலகிற்குப் பார்பட்டே இருக்கவேண்டும். ஏனெனில் இப்பூலகில் யாரும் அந்த இறைவனைக் கண்டதோ மற்றெவர்க்கும் காண்பித்ததோ இல்லை, புராணங்கள் நீங்கலாக. மேலும் நாம் காலத்திற்கு உட்பட்டவர்கள், அவனை காலத்திற்குப் பார்ப்பட்டவனாக கருத வேண்டும்.
இந்த நோக்கில்தான் எல்ல மதங்களும் திகழ்கின்றன. ஆகையால் இம் மதங்களில் இறைவன் பற்றிய விவரங்களை உண்மை என எண்ணுவதில் உள்ள குறைகள் பல. உதாரணமாக — உயிர்கள் படைத்த பொருள்களைப் பயன் படுத்து கின்றன. இறைவன் எப்பொருளைப் பயன் படுத்தி உலகையும் சுவர்கத்தையும் படைத்தான்? அப்பொருளைப்படைத்தவன் யார்? இறைவன் காலத்தையும் படைக்கலில்லை என்றால், அந்த காலத்தைப்படைத்தவன் யார்? பற்பல மதங்களைக் கடைப்படிப்பவர்கள் இறந்தபின் வேறு வேறான சுவர்கங்களுக்கு செல்வார்களா? மேலும் அவன் ஆணா, பெண்ணா அல்லது அது அவ்வேற்றுமை அற்றதா?
மதங்களின் இந்த அடிப்படையை விளக்க என் வேதாந்த ஆசானின் உதாரணம் — பானையைக் கற்பித்த குயவன் பானைக்கு வேறானவன். படைக்கப்பட்ட பானைக்கு குயவன் அறிவு-காரணம் (intelligent cause), மண் பொருள்-காரணம் (material cause). இருவித காரணங்களை இறைவனுக்கும் புரம் போக்குவதன் (extrapolating) பலனே மதங்களில் உள்ள முறண்பாடுகள். நம்மால் தருக்கமுறையில் இறைவனின் சொரூபத்தை விவரிக்க முடியாது. ஆகையால் இத்தன்மைகளுக்கு (qualities) அப்பால் ஒரு உண்மை (Truth / Reality) இருக்க வேண்டும் என்றே எண்ணவேண்டியுள்ளது. அவ்வுண்மை நம் பகுத்தறிவுக்குப் பார்பட்டதே. இந்த உண்மையை வேதங்களின் கடைப்பகுதியான உபநிடதங்கள் அறிவிக்கின்றன. சுருங்கக்கூரின் பொருள் காரணமும் அறிவு காரணமும், அதாவது படைத்தவன், படைப்பு (மனிதனுட்பட எல்லா உயிர்களும் பொருள்களும்) இவை இரண்டும் ஒரே இடத்தில் (same locus) உள்ளதே இறைவனின் அடிப்படை உண்மை (absolute truth / fundamental reality) என்பதுதான் உபனிட தத்துவம். இதை அத்வைத வேதாந்த தத்துவம் என்றும் சொல்கின்றனர்
இறைவனின் தன்மைகளும் உண்மையும்
தைத்திரீய உடநிடத இரண்டாம் பாகமான ஆனந்த வல்லியின் இரண்டாவது வாக்கியத்தில் முதற்சொல் சத்யம் (உண்மை). இச்சொல்லின் விரிவுரையில் “முக்காலத்திலும் மாறாமல் இருப்பது” என்று வரையறைகிறார் (defines) சங்கரர். அந்த உபநிடத முழு வாக்கியம் — ‘முக்காலத்திலும் உள்ளது, அறிவுப்பிழம்பு, எல்லை அற்றது பிரம்மன்’(सत्यं ज्ञानमनन्तम्ब्रह्म). இ்வுண்மையைத்தான் பட்டத்திரி ப்ரஹ்மதத்வம்எனகிறார் முதற் பாசுரத்தில்.
இந்நோக்கில் பார்ப்பின், இறைவன் பற்றிய தன்மைகளை பொதுப்படை உண்மைகள் (relative truth) என்றே சொல்லலாம். மேலும் உபநிடத உண்மையை அடிப்படை உண்மை (fundamental truth) என்றே கூரவேண்டும். பொதுப்படை, அடிப்படை உண்மைகளை நன்கு விளங்க சில உதாரணங்கள்: தங்க மோதிரம், தங்கக் கங்கணம், தங்கச் சங்கிலி இவைகள் பொதுப்படை உண்மைகள். இவைகளின் வேற்றுமைகள் — பெயர், உருவம், குணம், பயன், உடைமை, நம் ஈடுபாடு இவைகளே (name, form, quality, class, function and relationship; नाम, रूप, गुण, जाति, क्रिया, सम्बन्ध). இத்தன்மைகளால் கட்டுப்படாடது, இவகளின் அடிப்படை உண்மை தங்கம். இந்த விதத் தன்மைகள் இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருள்களும் உட்பட்டதே, மனிதனும், அவன் வணங்கும் கடவுளும்! இதை நாம் சற்று ஆராய்தால் வேதாந்த தத்துவம் நன்கு விளங்கும்.
இவ்வுண்மையை சுலபமாக விளக்க ஶ்ரீ ரமண மகரிஷியின் உதாரணம் ஒன்று — அரசன், சேவகன் என்ற வேற்றுமை பிறப்பு, பதவி, உடை, ஆபரணங்களே. இவைகளைக் களைந்தால் அரசன் சேவகன் வேற்றுமை மறைகிறது, அடிப்படை உண்மை அரசனும்இல்லை சேவகனும் இல்லை, இருவரும் மனிதர்கள் என்பதே! இந்த அரச சேவக வேற்றுமைகள் பொதுப்படை உண்மையானவே. அடிப்படை உண்மை வேற்றுமையின்மை என்பது தெரிகிறது. இந்தப் பதவி, உடை, பிறப்பு, படிப்பு மற்றெல்லாம் வேஷமே, அவ்வேஷம் களைத்தால் உண்மை தெரிகிறது.
நம்மில் பலர் திருமாலைப் பெருமாள் என்றே கூருகின்றனர். ஏன்? இதன் தத்துவம் – ஆள் என்பது மனிதனின் மறு பெயர். உலக நொக்கில் பெருமாள் = பெரும் + ஆள், இந்த உவமைப்படி நாம் சிறுமாள்களே (சிறும் + ஆள்) இப்பெருமையும் சிறுமையும் எவ்விதம்? ஆட்களின் உடல்கள் பிறப்பிறப்பிற்கு உட்பட்டவை. குறிப்புள்ள இடத்தில் உடல் உள்ளவை. அதாவது ஆட்கள் கால, தேசங்களுக்கு உட்பட்டவர்கள். மேலும் அறிவிலும் எல்லை உள்ளவர்கள். பெருமாள் இவைகளால் கட்டுப்படாத்தால் நாம் கடவைளைப் பெருமாள் என்று அழைக்கிறோம். இவை யெல்லாம் தன்மைகளே.
ஶ்ரீ ரமண மகரிஷியின் உதாரணப்படி பெருமாள் சிற்றாள்களின் வேஷங்கள் — இறைவன் எல்லாம் வல்லவன், யாதுமறிந்தவன், பிறப்பு,இறப்புகளுக்குப் பார்பட்டவன் மற்றும் பற்பல வேஷங்கள் உள்ளவன். சிறுமாளின் வேஷங்கள் — குட்டை, நெட்டை, சாதி, மதம், வயது, பிறந்த ராசி, மற்றும் பல. இவையெல்லாம் வேஷங்களே. இவ்வேஷங்களைக் களைந்தால் வேற்றுமை அற்ற பிரம்மனே தான் அடிப்படை உண்மை என்று உள்ளங்கை நெல்லிக்கை போல் உணரமுடிகிறது. இந்த அடிப்படை உண்மையைத்தான் வியாசமுனி பேருண்மை என்கிறார்.
இந்த உருவம், குணம், காலம், செய்கை, உறவு இவைகள் அற்ற அப்பிரம்மன்னான இறைவனுடைய உண்மைக்கு இவ்வுலக உவமைகள் இல்லாத்தால் அனுபமிதம், காலதேசாவதிப்யாம் நிர்முக்தம் என்றும், சிறுமாள்கள் போல் ஆசைகளால் கட்டுப்படாத்தால் நித்யமுக்தம் என்றும் பட்டத்திரி முதற் கவிதையில் புனைகிறார். பற்பல உபநிடதங்களும், பகவத்கீதையும் இந்த அடிப்படை உண்மையை கற்பித்தும் மானிடர்களால் தெளிவாக அறியவோ நன்கு உணர்வதோ அரிதே என்று கண்கூடாக இன்றும் காண்கிறோம். அதனால் பட்டத்திரி நிகமஶதசகஸ்ரைர்நிர்பாஸ்யமானம், அஸ்பஷ்டம் என்கிறார். இதன் காரணம் என்ன என்பதை பட்டத்திரி கவிதையில் பல இடங்களில் முறையிடுகிறார். அதை விவரிக்க இங்கு இடமில்லை.
அந்த உண்மையை உணர்வது அரிதாக இருப்பினும் முயற்சி செய்யும் பல்லாயிர மனிதர்களில் ஒருசிலர் இவ்வுண்மையை நன்கு உணர்கின்றனர்கள் என்பதை நாம் காண்கிறோம். இதைத்தான் த்ருஷ்டமாத்ரேஎன்றுரைக்கிறர்.
இறைவனின்உண்மையைத் தெரிவிக்கும் பாடல்கள்
வேதங்கள் இறைவனின் உண்மையையும் தன்மைகளையும் நன்கு அறிவிக்கின்றன. இதே உண்மையும் தன்மையும் கூறும் பாசுரங்கள் பல தமிழில் உள்ளன. சில உதாரணங்கள்:
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு — திருவள்ளுவர்
அங்கிங் கெனாத படி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்ததெது
தன்னருள் வெளிக்குளேஅகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்கிச்சை வைத்து உயிக்குயிராய்
தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாம் தந்தெய்வம்
எந்தெய்வமென்றெங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய் என்றைக்குமுள்ள தெது
கங்கு பகலற நின்ற எல்லா உள்ளதெது அது கருத்திற் கிசைந்ததுவே கண்டன வெலாமோன
உருவெளிய தாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம்.—தாயுமானவர்
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனதென்றவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே
— மாணிக்கவாசகர்
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ — சித்தர்
முடிவுரை
ஸாந்த்ரானந்த-அவபோதாத்மகம், உருபுருஷார்த்தகம்இவ்விரண்டு சொற்களை விளக்க இந்த பிலாகில் (blog) இடமில்லை. ஏனெனில் முதலில் அறிவு, உணர்வு என்ற சொற்களை நான் பயன்படுத்தியதன் உட்பொருளை விளக்க வேண்டும். மேலும் புருஷார்த்தம் என்ற சொல்லையும் விவரிக்க வேண்டும். ஆகையால் இவைகளை அடுத்த பிலாகில் விளக்க முயல்கிறேன், அந்த குருவாயூரப்பன் அருளால்.
Wow! Amazing effort indeed… I have read only once. I will surely read a few more times to understand better.
Thanks for your efforts to contribute deeply.
Namaskarams.
Ranga (Suresh), Bangalore